×

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரம் தேர்தல் விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு: மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: டிசம்பர் 4,5 மற்றும் 6ம் தேதிகளில் நடைெபறும் ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் விசிக ரயில்வே தொழிலாளர் சார்பில் போட்டியிடுகின்றனர். இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்த வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து விசிக நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். பின்னர் மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டு திருமாவளவன் பேசி முடித்தார்.

 

The post ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரம் தேர்தல் விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு: மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Thirumavalavan ,CHENNAI ,Visika ,Chief Executive Officer ,Central Railway Head Office ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...