×

சுயஉதவி குழு தயாரித்த பொருட்கள் இயற்கை சந்தையில் இன்று விற்பனை

சென்னை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தையை நடத்துகிறது.

அந்தவகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் இயற்கை சந்தை நடைபெறவுள்ளது. இந்த சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியம் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சுயஉதவி குழு தயாரித்த பொருட்கள் இயற்கை சந்தையில் இன்று விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu State Rural Livelihood Directorate ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...