×
Saravana Stores

2016ல் நடந்த தேர்தல் தகராறு விவகாரம் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2016 சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.ஆர்.பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இல்லை. வேறொரு இடத்தில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தார். சம்பவத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பு இல்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

The post 2016ல் நடந்த தேர்தல் தகராறு விவகாரம் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : 2016 ,Minister ,Periyagaruppan ,Chennai ,KR Periyakaruppan ,DMK ,Tirupattur ,2016 assembly elections ,AIADMK ,Pattamangalam ,Thirukoshtiyur ,Periyakaruppan ,Dinakaran ,
× RELATED இயக்குனர் கிரிஷ் ரகசிய திருமணம்