×

மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை பிரிக்க எதிர்ப்பு பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு, விக்னேஸ்வரன் நகரில் மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கமானது கடந்த 1987ம் ஆண்டு துவங்கப்பட்டது . இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் அரசிடமிருந்து மொத்தமாக துணிகளை வாங்கி அதனை கூலி அடிப்படையில் தைத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.   இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் இங்கு பணிபுரியும் பெண்கள் இந்த கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க கூடாது என வலியுறுத்தியும் இங்கிருந்த மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் இது சம்பந்தமான புகார் மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர். இருப்பினும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சங்கத்தை இரண்டாக பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.   இதனைத் தொடர்ந்து தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தங்கள் பணியை நிறுத்திவிட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்  இங்கு உள்ள மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து நிரந்தர தீர்வு காணும் வரை  உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்….

The post மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை பிரிக்க எதிர்ப்பு பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : District Women's Tailoring Co-operative Society ,Tiruvallur ,District Women's Tailoring Industry Cooperative Society ,Vigneswaran Nagar ,4th Ward ,Tiruvallur Municipality ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்