×

என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 6 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 மாணவர்களும் போலி ஆவணங்களை கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 6 மாணவர்களில் 3 பேர் தூதரக சான்றிதழை போலியாக கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரத்து செய்யப்பட்ட மாணவர்களின் 3 இடங்கள் சிறப்பு கலந்தாய்வில் சேர்க்கப்படும். என்றும் தெரிவித்துள்ளது.

 

The post என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து appeared first on Dinakaran.

Tags : MBPS ,NRI ,Chennai ,Tamil Nadu ,Directorate of Medical Education ,
× RELATED போலி என்ஆர்ஐ சான்றிதழ்; 46 டாக்டர்கள்...