×
Saravana Stores

மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை

வருசநாடு: கண்டமனூர் மூலவைகை ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளப்பெருக்கு செல்வதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்லவோ, தடுப்பணையில் குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள ஓயம்பாறை, வாலிப்பாறை போன்ற வனப்பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தடுப்பணை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். தடுப்பணையில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. மூலவைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mula ,Waikai River ,Public Works Department ,Kandamanur Mulavaigai river ,Theni district ,Varusanadu ,Oyamparai ,Valiparai ,Mula Vaigai river ,Dinakaran ,
× RELATED மூல வைகை ஆற்றில் நீர்வரத்து...