×

மணமக்களுக்கு கிப்ட் கொடுத்த வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு: திருமண வரவேற்பில் பரிதாபம்

திருமலை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு கிப்ட் கொடுத்த வாலிபர் சுருண்டு விழுந்து இறந்தார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெனுமடா கிராமத்தைச் சேர்ந்தவர் வம்சி (28). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை ெசய்து வந்தார். இவரது நண்பரின் திருமணம் நேற்று பெனுமடா கிராமத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வம்சி ஊருக்கு வந்திருந்தார். திருமணம் முடிந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் வம்சி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். பின்னர் மணமக்களுக்கு பரிசு அளிப்பதற்காக, நண்பர்களுடன் மணமேடைக்கு சென்றார். அங்கு மணமக்களுக்கு பரிசு வழங்கிவிட்டு, அதனை பிரித்து பார்க்கும்படி தெரிவித்தனர்.

இதனால் மணமக்கள், கிப்ட் பாக்சை பிரித்துக்கொண்டிருந்தனர். நண்பர்கள் அனைவரும் டான்ஸ் ஆடியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது வம்சி திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், வம்சியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மணமேடையில் கிப்ட் கொடுத்துவிட்டு சிரித்து பேசிக்கொண்டே நண்பன் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அவரது நண்பர்கள், மணமக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

The post மணமக்களுக்கு கிப்ட் கொடுத்த வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு: திருமண வரவேற்பில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Vamsi ,Benumada ,Kurnool district ,Andhra state ,Bangalore ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச்...