×

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்: அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்த புதின்!!

ரஷ்யா: உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளை தாக்குவோம் என ரஷ்ய அதிபர் புதின் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் அண்டை நாடான ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.

சுமார் 2 ஆண்டுகள் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வரும் அமெரிக்கா, தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் அமெரிக்கா அளித்து இந்த அனுமதி குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்; ரஷ்யாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான போரை மேற்கத்திய நாடுகள் உலகப் போராக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

The post ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்: அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்த புதின்!! appeared first on Dinakaran.

Tags : Russia ,United ,States ,Chancellor Mint ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவின் காஸன் நகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!!