×

போளூர் அருகே பக்தர்கள் குவிந்தனர்: கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுடும் திருவிழா

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கொதிக்கும் எண்ணெயில் சுட்ட வடைகளை இரண்டு கைகளால் குப்பன்(34), சுப்பிரமணி(55), அஜித்குமார்(24) ஆகியோர் எடுத்தனர்.கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் வடை எடுப்பதை காண சுற்றுவட்டாரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். கொதிக்கும் எண்ணெயில் கைகளால் எடுக்கப்பட்ட வடையை நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதனால் பெண்கள் வடையை ஆர்வமாக வாங்கி சென்றனர்.  மேலும் கூட்டத்தில் பல பெண்கள் சாமி  ஆடினர். சுமார் 100 வடைகள் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் சுடப்பட்ட நிலையில், அவை  இலவச பிரசாதமாக வழங்கப்பட்டது….

The post போளூர் அருகே பக்தர்கள் குவிந்தனர்: கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுடும் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Bolur ,Anuman Jayanti ,Sri Ramabhata Anjenayar Temple ,Mandagolathur ,Tiruvannamalai district ,Polore ,Polur ,
× RELATED 3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை போளூரில் பரபரப்பு