×

சென்னையில் இருந்து அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம் மோசமான வானிலையால் அவசரமாக தரையிறக்கம்

மதுரை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. சென்னை தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

இன்று சென்னையிலிருந்து காலை 6 மணியளவில் தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பயணித்தனர். தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக அதிகப்படியான மேகமூட்டம் காணப்படுவதால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

மோசமான வானிலை காரணமாக 20 நிமிடத்திற்கும் மேலாக அப்பகுதியில் விமானம் வானில் வட்டமடித்தது. விமானம் தூத்துக்குடியில் 7.30 மணிக்கு தரையிறங்க வேண்டும். ஆனால் நீண்ட நேரம் வானிலை சரியாகாத காரணத்தால், விமானம் தரையிறங்க அவசர சூழல் ஏற்பட்டதால் மதுரை விமான நிலையத்தில் காலை 8 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பயணிகளும் பாதுகாப்பாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அவர்களின் இல்லத்திற்கு கார்களின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

The post சென்னையில் இருந்து அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம் மோசமான வானிலையால் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai A.V. ,Velu ,Madurai ,Chennai ,Tuticorin ,A. V. Velu ,AV ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED “திட்டத்தை அறிவித்தால் போதாது; அதனை...