மதுரை : அதிகாரியை தனது கடமையை செய்யவிடாமல் தடுப்பதை தீவிரமானதாக கருத வேண்டும் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர் என்றும் சட்டம் இங்கு செயல்பாட்டில் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். கரூர் வெண்ணெய்மலை கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு என ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
The post அதிகாரியை தனது கடமையை செய்யவிடாமல் தடுப்பதை தீவிரமானதாக கருத வேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.