- அமைச்சர்
- வி.கணேசன்
- சென்னை
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம்
- ஹூண்டாய்
- தின மலர்
சென்னை: ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நேற்று பெரும்புதூர் ஹூண்டாய் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ‘பாதுகாப்பு அதிகாரியின் பங்கு’ என்ற கையேட்டை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டு பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நடந்த 1,844 பயிற்சி வகுப்புகள் மூலம் 98,245 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தொழிலாளர்களின் உயிரும் விலை மதிக்க முடியாதது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீரராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இயக்குனர் செந்தில்குமார், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அலுவலர் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒவ்வொரு தொழிலாளியின் உயிரும் விலை மதிக்க முடியாதது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு appeared first on Dinakaran.