×

2 திருநங்கைகள் கைது

சேலம், நவ.21:சேலம் மெய்யனூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ரங்கீலாஸ்ரீ(21). திருநங்கையான இவருக்கும், பள்ளப்பட்டி கார்கானா தெருவை சேர்ந்த திருநங்கைகள் நபிஷா, ரம்யா ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. ரங்கீலாஸ்ரீ திருநங்கையாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள உதவிய திருநங்கை நிவாஞ்சலி, கார்கானா தெருவில் வசித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு நிவாஞ்சலியிடம் நபிஷா, ரம்யா ஆகியோர் தகராறு செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் ரங்கீலாஸ்ரீ அங்கு புறப்பட்டு சென்றார். அப்போது அங்கீருந்த நபிஷா, ரம்யா ஆகியோர் செங்கல்லால் ரங்கீலாஸ்ரீயை தாக்கினர். இதில் நெஞ்சில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, நபிஷா, ரம்யாஆகியோரை கைது செய்தனர்.

The post 2 திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Rangeelasree ,Meiyanur Pudutheru ,Nabisha ,Ramya ,Pallapatti Gargana Street ,Nivanjali ,Gargana ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி