×

சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு கூடுதல் எஸ்பி நியமனம்: டிஜிபி உத்தரவு

சென்னை: சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கு கூடுதல் எஸ்பி பணிநியமனம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு-2 கூடுதல் துணை கமிஷனராக இருந்த முத்துவேல்பாண்டி மாற்றப்பட்டு அவருக்கு பதில் காஞ்சிபுரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி சார்லஸ் சாம் ராஜதுரை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல்பாண்டி தற்போது சென்னை பெருநகர கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார்.

The post சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு கூடுதல் எஸ்பி நியமனம்: டிஜிபி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Central Crime Branch ,DGP ,CHENNAI ,Shankar Jiwal ,Metropolitan Central Crime Branch ,Muthuvelpandi ,Chennai Metropolitan Police Central Crime Branch-2 ,Kanchipuram District ,Dinakaran ,
× RELATED பொய்யான வீடியோ பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு..!!