×

பணம் வாங்க முடியாது.. ஜிபே மூலம் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்: ராஜபாளையத்தில் ரயில்வே ஊழியரால் பரபரப்பு!

விருதுநகர்: ராஜபாளையத்தில் ரயில்வே அலுவலரின் அலட்சியத்தால் டிக்கெட் கவுண்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் பயணம் செய்யவும், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் பயணம் செய்யவும் ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.

அவர்கள் டிக்கெட் எடுத்த போது டிக்கெட் கவுண்டரில் இருந்த அலுவலர் ஜிபே மூலமாக பணம் செலுத்தினால் மட்டுமே டிக்கெட் தரப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருக்கையை விட்டு எழுந்து சென்ற அவர் வெகு நேரத்துக்கு பிறகு வந்து பணம் வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்க தொடங்கினார். அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

The post பணம் வாங்க முடியாது.. ஜிபே மூலம் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும்: ராஜபாளையத்தில் ரயில்வே ஊழியரால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Jibay ,Rajapalayam ,Virudhunagar ,Rajapalaya ,Senkot ,Madurai ,Chennai ,Guruvayur ,Jib ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்