×

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை வெற்றி


ஷென்ஜென்: சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 24-22, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சிகோ அவ்ராவிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் 10-21, 18-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாமோகா மியாஜகியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 50வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா 21-17, 8-21, 22-20 என்ற செட் கணக்கில் 15ம் நிலை வீராங்கனையான பீவென் ஜாங்குக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

The post சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : CHINA ,MASTERS ,Shenzhen ,China Masters International Badminton Tournament ,Shenzhen City ,Priyanshu Rajawat ,Indonesia ,Chico Awara ,China Masters Badminton ,Dinakaran ,
× RELATED தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா மலர்கள் பூத்திருச்சு