×

கீழ்பென்னாத்தூர் அருகே பரிதாபம்: மரத்தில் பைக் மோதி 3 மாணவர்கள் பலி


கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தை சேர்ந்தவர் வன்னியன் மகன் முத்துலிங்கம் (16). சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் ராமன் (17), இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (17). இவர்கள் 3 பேரும் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் முத்துலிங்கம் உள்ளிட்ட 3 பேரும் ஒரே பைக்கில் வேட்டவலத்தில் இருந்து தளவாய்குளம் நோக்கி சென்றனர். ஆவூர் முருகர் கோயில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் உள்ள அரச மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமன், ஜெகதீஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துலிங்கம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராமன், ஜெகதீஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் வழியிலேயே ராமன் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்பேரில் வேட்டவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கீழ்பென்னாத்தூர் அருகே பரிதாபம்: மரத்தில் பைக் மோதி 3 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Kilipennathur ,Muthulingam ,Vanniyan ,Vettavalam village ,Tiruvannamalai district ,Raja ,Raman ,Chinna Olaipadi village ,Isukkazhikatteri village ,Kilibennathur ,
× RELATED சாலை விபத்தில் 5 மாணவர்கள், வனக்காப்பாளர் பலி