×

திருமணத்திற்கு பேனர் கட்டியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி: ராஜபாளையம் அருகே சோகம்


ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, சேத்தூரில் உள்ள மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர்கள் முருகன் (40), முத்துராஜ் (50). பந்தல் போடும் தொழிலாளர்களான இருவரும், சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதியில், திருமண விழாவுக்காக நேற்று மாலை பேனர் கட்டி கொண்டிருந்தனர். அப்போது பேனரில் இருந்த இரும்பு ஆங்கில், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் வயரில் உரசியது. இதில், இருவரும் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆட்டோவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்துராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருமணத்திற்கு பேனர் கட்டியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி: ராஜபாளையம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Murugan ,Muthuraj ,Mettupatti Street, Sethur ,Rajapalayam, Virudhunagar district ,Chetur five-shop ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்