×

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இன்று வாக்குப்பதிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது. இதில், பாஜ, ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் மோதுகின்றன. இதே போல 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று நடக்க உள்ளது.

ஏற்கனவே முதல் கட்டமாக 43 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. இதைத் தொடர்ந்து எஞ்சிய 38 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில், மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோர் போட்டியிடும் பர்ஹைத், கண்டே தொகுதிகளிலும் தேர்தல் நடக்க உள்ளது.

ஜார்க்கண்டில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதுதவிர, உபி, பஞ்சாப், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இவற்றில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இன்று வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Maharashtra, Jharkhand ,Mumbai ,Maharashtra ,Mahayudi ,BJP ,Shinde Shiv Sena ,Ajit Pawar ,Nationalist Congress parties ,Congress ,Uddhav Shiv Sena ,Sarath Pawar ,Nationalist ,
× RELATED மகாராஷ்டிராவில் பரபரப்பு பஞ். தலைவர்...