×

தகராறு குறித்து போலீசில் புகார் அளித்ததால் பால் வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை போலீசில் புகார் அளித்ததால் பால் வியாபாரம் செய்து வரும் பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாள் வெட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி அடுத்த டாக்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் சீதாராமன். இவருக்கு கன்னியம்மாள் (46) என்ற மனைவியும் சிவா (26), தினேஷ் (25) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்றுமுன்தினம் மாலை மேய்ச்சலுக்கு டாகா நகர் பகுதியில் உள்ள கட்டி முடிக்கப்படாத பழைய கட்டிடத்தில் கன்னியமாமாள் வீட்டு மாடுகள் உள்ளே சென்று மேய்ந்து கொண்டிருந்தது. இதனை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு தினேஷ் அங்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் செட்டிப்புண்ணியம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், அய்யனார், தமிழ் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கே மது குடிப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அடுக்குமாடி காவலாளி கண்ணியம்மாள் தினேஷை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்துள்ளார்.

ஆனால், அங்கிருந்த ஐந்து நபர்களும் தினேஷை மட்டும் உள்ளே அனுமதிக்கலாம். எங்களை அனுமதிக்க கூடாதா என அங்கிருந்த காவலாளி மற்றும் தினேஷிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தினேஷின் தாயார் கன்னியம்மாள் இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் இரு தரப்பினரிமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் அந்த ஐந்துபேரும் அளவுக்கதிகமாக மது போதையில் தினேஷை தாக்குவதற்காக அன்று இரவே அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். கன்னியம்மாள் அப்போது, தினேஷ் மற்றும் சிவா இருவரையும் வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவர் மட்டும் வெளியே வந்து அவர்களிடம் பேசியுள்ளார்.

எங்களை போலீசில் மாட்டி விடுறியா உன் மகனை கூப்பிடுறியா இல்லையா என பேசிக்கொண்டே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐந்து பேரும் கன்னியம்மாளின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளனர். அப்போது, கன்னியம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதை கண்டதும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். பின்பு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமைவாக உள்ள ஐந்து பேரையும் போலீசார் விசாரணை செய்த தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தகராறு குறித்து போலீசில் புகார் அளித்ததால் பால் வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dhaka Nagar ,Mahendracity, Chengalpattu ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...