×

கரிக்கிலி ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கரிக்கிலி ஊராட்சியில் உலக கழிவறை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரிக்கிலி ஊராட்சியில் நேற்று உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கொடியான் தலைமையில் நடைபெற்றது. ‘நமது கழிவறை! நமது கௌரவம்’ எனும் தலைப்பில் கிராம பொதுமக்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு உலக கழிவறை தினத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கொடியான் சமுதாய சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். தூய்மையை பேணி காப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கரிக்கிலி ஊராட்சியில் உலக கழிவறை தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : World Toilet Day ,Karikili Panchayat ,Madhurantagam ,Achirupakkam Union ,Chengalpattu District Achirupakkam Panchayat Union ,Panchayat ,President ,Pushpa Kodiyan ,
× RELATED கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடி...