×

கழிப்பறை கட்டுவதற்கான ஆணை: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், விஷ்ணுவாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) ரவி, (வ.ஊ) குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கீதா மோகன் அனைவரையும் வரவேற்றார். அப்போது கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை கலெக்டர் வாசிக்க பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கழிப்பறை கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். பிறகு அதே பகுதியில் பயனாளிகள் கழிப்பறை கட்டுவதற்கான பணிகளையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

The post கழிப்பறை கட்டுவதற்கான ஆணை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,World Toilet Day ,Thiruvallur Panchayat Union ,Vishnuvakkam Panchayat ,Rural Development and Panchayat Department ,Collector ,T. Prabhu Shankar ,District Rural Development Agency Program ,Jayakumar ,Tiruvallur… ,
× RELATED மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு