×

கால்நடை சிகிச்சை முகாமில் ரூ.5.88 லட்சம் பராமரிப்பு கடன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. இந்த விழா இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று சிறந்த கூட்டுறவு சங்ககளுக்கு விருது, பயனாளிகளுக்கு கடன் உதவி, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர், எம்.பி, எம்எல்ஏகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இலவச கால்நடை சிகிச்சை முகாமில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி கலந்துகொண்டு 7 பேருக்கு ரூ.5.88 லட்சம் கால்நடை பராமரிப்புக்காக கடன்களை வழங்கினார்.
முகாமில் துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் மங்கலதாஸ், கூட்டுறவு சார்- பதிவாளர்கள் இளங்கோவன், ராஜலட்சுமி, ஆவின் உதவி பொது மேலாளர் நாகராஜன், கால்நடை மருத்துவர்கள் அனீஸ், சதீஷ்குமார், சங்கத்தின் செயலர்கள் திருமேனி, நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கால்நடை சிகிச்சை முகாமில் ரூ.5.88 லட்சம் பராமரிப்பு கடன் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,71st All India Cooperative Week ,Tiruvallur district ,Minister ,Avadi Nasser ,
× RELATED மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு