×
Saravana Stores

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மின்னணுபயிர் சாகுபடி கணக்கீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம்

சென்னை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கிண்டி அறிவியல் நகரத்தில் இன்று மின்னணுபயிர் சாகுபடி கணக்கீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த 2022-23 முதல் வேளாண் அடுக்கு (Agri Stack) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வேளாண் அடுக்கில் விவசாயிகள் பதிவு மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு, கிராமம் மற்றும் நிலங்களுக்கான புவியிடக் குறியீடு வழங்குதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில், மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு பரிசோதனை முறையில் தமிழ்நாட்டில் உள்ள 110 கிராமங்களில் காரிப்(Kharif) பருவத்தில் நடத்தப்பட்டது.

பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள ராபி(Rabi) 2023 பருவத்திலும் காரிப்(Kharif) 2024 பருவத்திலும் வருவாய் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இக்கணக்கீடு முழுமையாக நடத்தப்படவில்லை. மின்னணு முறையில் விவசாயிகள் தரவு மற்றும் அவர்களின் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் குறித்த விவரங்கள் பராமரிக்கப்படுவதால் விவசாயிகள் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும், இவ்விவரங்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்குவதிலிருந்து தவிர்ப்பதே வேளாண் அடுக்குத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவசாயிகள் வெகு சுலபமாக பயிர் கடன் மற்றும் இதர கடன்களை பெறுவதற்கு வங்கிகள் வேளாண் அடுக்கில் (Agri Stack) சேகரிக்கப்பட்ட மின்னணு தரவுகளின் அடிப்படையில் கடன் வழங்குவதற்கு உதவி புரியும். மின்னணு பயிர் சாகுபடி கணக்கீட்டினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் மட்டும்தான் மின்னணு தரவுகளை அரசு துறைகள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கிட முடியும். வேளாண்மைத்துறை நடப்பு ராபி(Rabi) பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் விவரங்களை விடுபாடின்றி முழுமையாக சேகரித்திட முடிவு செய்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேளாண்மை கல்லூரிகளின் மாணவர்களையும் இக்கணக்கீட்டில் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் சேர்த்துக்கொள்ள முடிவு செய்து 23,000 மாணவ மாணவியரையும் 7000-க்கும் அதிகமான வேளாண்மைத்துறை அலுவலர்கள்/பணியாளர்களைக் கொண்டு கடந்த 06.11.2024 முதல் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகின்றது.

இதுவரை 2.5 கோடிக்கு கூடுதலான நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியரை கல்லூரிகளில் இருந்து அழைத்து வருவதற்கு பேருந்து வசதியும், காலை, மதிய உணவு வசதி மற்றும் தங்குவதற்கான இட வசதியும் வேளாண்மைத்துறையால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியருக்கு இந்த கணக்கீட்டு சாகுபடி செய்யப்படும் பயிர்களை பற்றியும், அவற்றின் வளர்ச்சி பருவங்களை அறிந்து கொள்வதற்கும் களப்பயிற்சியாக அமைந்துள்ளது. மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் மின்னணு பயிர் கணக்கீட்டு சாகுபடியில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவி புரிவதற்கு வேளாண்மைத்துறை மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் செல்கின்றனர். எனவே, நடப்பு ராபி(Rabi) பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை 100% கணக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மின்னணு முறையில் தகவல்கள் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் இதர துறைகளுக்கு மற்றும் வங்கிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதனால் விவசாயிகள் எளிதில் பயிர் சாகுபடி விவரங்களை பெற வாய்பாகின்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மை இயக்குநர் பி. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி. குமரவேல் பாண்டியன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் கோ.பிரகாஷ், சர்க்கரைத் துறை இயக்குநர் டி. அன்பழகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மின்னணுபயிர் சாகுபடி கணக்கீடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,CHENNAI ,Guindy Science City ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 34,372 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில்...