×

இந்தியில் எல்ஐசி இணையதளம் மாற்றப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை: எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை உடனடியாக ஆங்கில மொழிக்கு மாற்றவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆங்கில மொழியில் இருந்த எல்.ஐ.சியின் இணைய தள முகப்புப் பக்கம் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. பிற மொழி பேசும் மக்கள் மீதான அப்பட்டமான இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

The post இந்தியில் எல்ஐசி இணையதளம் மாற்றப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramdas ,LIC ,Chennai ,Ramadoss ,Ramadas ,
× RELATED உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற...