×

தேனி குடிநீர் வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ரூ.1.15 கோடி மோசடி: வழக்கு பதிந்து விசாரணை

தேனி: தேனி குடிநீர் வடிகால் வாரிய அலுவலக கணக்கில் இருந்து ரூ.1.15 கோடி மோசடி செய்த அலுவலக கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் கோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக கருத்தபாண்டியன், கண்காணிப்பாளராக முருகானந்தம் பணிபுரிந்து வருகின்றனர். அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் கோட்ட தலைமை அலுவலக விழிப்பு பணி அலுவலர் வரதராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த ஜூன் 6ம் தேதி மற்றும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதிகளில் ஆய்வு நடத்தினர்.

இதேபோல கடந்த செப். 24ம் தேதி மற்றும் செப். 26ம் தேதிகளிலும் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, கடந்த 2022, அக். 1ம் தேதி முருகானந்தம், காசோலை மூலம் சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.42.29 லட்சத்தை அனுப்பியுள்ளார். மேலும், அலுவலக வங்கிக்கணக்கில் இருந்து தனது பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் பரிமாற்றம் செய்த ரூ.75.77 லட்சத்தை சேர்த்து மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தேனி கோட்ட நிர்வாக பொறியாளர் கருத்தப்பாண்டியன், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கண்காணிப்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனி குடிநீர் வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ரூ.1.15 கோடி மோசடி: வழக்கு பதிந்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Teni Drinking Water Board ,Teni ,Teni Drinking Water Drainage Board ,Tamil Nadu Drinking Water Board ,Line ,Dinakaran ,
× RELATED தேனி நகர் புதிய பஸ்நிலையம் அருகே...