×

குஜராத் சிறையிலுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் அதிரடி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலை மற்றும் நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் குஜராத் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். அவர் கனடாவில் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்மோல் மீது சிறப்பு நீதிமன்றத்தின் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் மற்றும் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகியவை பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே அவரை நாடு கடத்த மும்பை போலீசார் அமெரிக்காவிடம் கோரிக்கை வைப்பார்கள் என்று தெரிகிறது. பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த அன்மோல் பிஷ்னோய், போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றதாகவும், கைது செய்யப்படுவதற்கு முன்பு கனடாவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரைப் பற்றிய தகவல் தருபவருக்கு என்ஐஏ ரூ.10 லட்சம் வெகுமதி அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post குஜராத் சிறையிலுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Dada Lawrence Bishnoi ,Gujarat Jail ,USA ,Mumbai ,Anmol Bishnoi ,Lawrence Bishnoi ,Gujarat ,Nationalist Congress ,Baba Siddiqui ,Maharashtra ,Salman Khan ,Mumbai.… ,America ,
× RELATED அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பிரபல...