×

திருப்பதியில் தரிசன நேரம் குறைக்க ஏஐ மூலம் ஆய்வு: அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய இந்து மதம் அல்லாத வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களை நேரில் அழைத்து பேசி அவர்கள் விருப்பப்பட்டால் விஆர்எஸ் வழங்கி அனுப்புவது அல்லது அரசிடம் பேசி அவர்களை வருவாய் துறைக்கோ அல்லது வேறு ஏதாவது அவர்கள் கேட்கும் துறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட திருப்பதியில் உள்ள கருடா மேம்பாலம் கடந்த ஆட்சியில் சீனிவாச சேது என பெயர் மாற்றப்பட்டது.

அதனை மீண்டும் கருடா மேம்பாலம் என பெயர் மாற்றம் செய்யப்படும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநில சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளும் முறைகேடுகள் நடக்கும் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தரிசன காத்திருப்பு நேரத்தை குறைப்பது என்பது குறித்து நிபுணர்கள் குழுவு ஆய்வு செய்கிறது. திருப்பதியில் முக்கிய பிரமுகர்கள் அரசியல் மற்றும் சர்ச்சைகளை எழுப்பும் வகையில் பேட்டி அளித்தால், வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.

The post திருப்பதியில் தரிசன நேரம் குறைக்க ஏஐ மூலம் ஆய்வு: அறங்காவலர் குழு தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Board of Trustees ,Tirumala Tirupati Devasthanam ,Annamayya Bhavan ,President ,PR Naidu ,PR ,Naidu ,Tirumala Tirupati Devasthan ,
× RELATED கூட்ட நெரிசலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்...