- Tiruporur
- கேளம்பாக்கம் ஊராட்சி அங்கன்வாடி மையம்
- திருப்போரூர் ஒன்றியம்
- ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறை
- கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம்
- ஜனாதிபதி
- ராணி எல்லப்பன்
- தின மலர்
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடங்க விழா நேற்று நடைபெற்றது. கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார்.
இதில், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் கலந்துக்கொண்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கேளம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.