×

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே மெத்தபெட்டமைன் விற்ற வாலிபர் கைது

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை பெருநகரில் உள்ள 104 காவல் நிலையம் எல்லையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக அந்தந்த பகுதி போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே இரவு நேரங்களில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் பையுடன் சுற்றி வந்தார். அவரை பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் 2.2 கிராம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது. விசாரணையில், அயனாவரம் பொன்னுசாமி தெருவை சேர்ந்த சபீர் அகமது (26) என்றும், இவர் போதைப்பொருளை மொத்தமாக வாங்கி வந்து தனது வீட்டில் எடை எந்திரம் மூலம் ஒரு கிராம் பாக்கெட்டுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்து. அவரை கைது செய்தனர்.

The post நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே மெத்தபெட்டமைன் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nandanam YMCA ,CHENNAI ,Arun ,Chennai Metropolis ,Dinakaran ,
× RELATED சென்னையில் 27ம் தேதி புத்தகக்காட்சி தொடக்கம்