சென்னை: தமிழகத்தில் தொலைதூர நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் ரயில்களில் டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விமான டிக்கெட்டிற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் ஆம்னி பஸ்களில் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர். இதனால், அரசு விரைவு பேருந்துகளை பயணிக்கவே மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து வந்த நிலையில் அதனை 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
The post அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்ய கால வரம்பு 90 நாட்களாக அதிகரிப்பு appeared first on Dinakaran.