×

தமிழறிஞர்கள் 9 பேரின் நூல்கள் நாட்டுடைமை நூலுரிமை தொகை ரூ.90 லட்சம் வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று 2024-25ம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை ரூ.90 லட்சம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், இன்றைக்கு 9 தமிழறிஞர்களுக்கான நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, நினைவில் வாழக்கூடிய கவிஞர்களுடைய குடும்பத்தாருக்கு அவர்களுடைய மரபுரிமை வாரிசுதாரர்களுக்கும் இந்த விருதுகள் தலா ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் நீண்ட நாட்களாக இந்த விருதுகளை எதிர்ப்பார்த்து இருந்தார்கள்.

அந்த எதிர்ப்பார்ப்பை ஈடுசெய்யக் கூடிய வகையில் சட்டமன்றத்தில் முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க இன்றைக்கு அதை நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுத்தொகை தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், அவர்கள் எல்லாம் அந்த விருதுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும், மேலும் தமிழ் மொழியை செம்மைப்படுத்துகிற வகையிலும், இன்றைக்கு தமிழ் வளர்ச்சி துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு சாமிநாதன் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post தமிழறிஞர்கள் 9 பேரின் நூல்கள் நாட்டுடைமை நூலுரிமை தொகை ரூ.90 லட்சம் வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. P. Saminathan ,Chennai ,Tamil Development Department ,Chennai Art Gallery, Tamil Development and ,Information ,MU Saminathan ,
× RELATED நிதி அமைச்சரின் விளக்கத்தால்...