×
Saravana Stores

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை தாய் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி

சென்னை: மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர், கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை சாலிகிராமம் சிவனேயம் தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(45). இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு உணவு அருந்திவிட்டு வீட்டில் இருந்த போது, அவருடைய தாய் பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் படுக்கை அறையில் இருந்த கொசுக்களை ஒழிக்க பயன்படுத்தும் குட் நைட் லிக்யூட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். மகளை மீட்டு உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தார். மேலும், டாக்டர்கள் பரிந்துரைப்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின் படி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை தாய் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sivaneyam Street, Saligramam, Chennai ,
× RELATED ஓ.பி.எஸ். மீதான வழக்கு; விரைந்து குற்ற...