×

ஈரானின் புதிய உச்ச தலைவராக அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு: அதிரடிக்கு பெயர் பெற்றவர்!!

தெஹ்ரான் : ஈரானின் உச்ச தலைவராக அலி கமேனியின் 2வது மகன் மொஜ்தபா தேர்வு ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப்படும் பதவியும் ஆகும். தற்போதைய ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தனது 2வது மகன் மொஜ்தபாவை அலி கமேனி உச்ச தலைவராக தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது கூடிய 60 நிபுணர் சபை உறுப்பினர்கள், இந்த ரகசியத்தை காக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 85 வயதாகும் உச்ச தலைவர் அலி கமேனி, உடல் நலத்தை கருத்தில் கொண்டு விரைவில் பதவி விலகலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய உச்ச தலைவராக பதவியேற்க இருக்கும் மொஜ்தபா, ஏற்கனவே ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களை ஒடுக்கி பிரபலம் ஆனவர் ஆவார். இவர் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

The post ஈரானின் புதிய உச்ச தலைவராக அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு: அதிரடிக்கு பெயர் பெற்றவர்!! appeared first on Dinakaran.

Tags : Ali Khamenei ,Mojtaba ,Iran ,Tehran ,Supreme ,
× RELATED விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல்..!!