×

நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 

விழுப்புரம், நவ. 18: நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் அருகே திடீர்குப்பத்தை சேர்ந்தவர் மணி மகன் ஜெயராஜ்(எ) துரைப்பாண்டி(23). இவர் கடந்த அக்டோபர் 6ம் தேதி கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் வீட்டில், முன்விரோத தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். துரைப்பாண்டியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக்சிவாச் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து துரைப்பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பழனி உத்தரவு பிறப்பித்தார்.

The post நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Mani ,Jayaraj(A) Duraipandi ,23 ,Sudukuppam ,Kilpaperumpak ,
× RELATED விழுப்புரம் – திண்டிவனம் அருகே...