×

திருச்சியில் இந்தாண்டுக்குள் சித்தா, பல் மருத்துவக்கல்லூரி: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: திருச்சி அரசு மருத்துவமனையில் நோய் கிருமி கண்டறிவதற்கான புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஆய்வகத்தில் 7 நாட்களில் முடிவு தெரியவரும். ஆனால் தற்போது திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் ஒரே நாளில் முடிவுகள் தெரியவரும். அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் அடுத்தாண்டு ஜூலையில் திறக்கப்படும்.

இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். திருச்சியில் சித்த மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நிதி நிலைமைக்கு ஏற்ப இந்தாண்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post திருச்சியில் இந்தாண்டுக்குள் சித்தா, பல் மருத்துவக்கல்லூரி: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Siddha Dental College ,Trichy ,Minister KN Nehru ,Minister ,KN Nehru ,Trichy Government Hospital ,Dinakaran ,
× RELATED சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது...