×

போயிங் நிறுவனத்தில் 438 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம்

சியாட்டில்: விமான தயாரிப்பில் உலக புகழ்பெற்ற போயிங் நிறுவனத்தின் ஆலை அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது. வாஷிங்டன்,கலிபோர்னியாவிலும் ஆலைகள் உள்ளன. போயிங் ஊழியர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. 7 வார போராட்டத்துக்கு பின் சமீபத்தில் தான் அவர்கள் பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தின் விளைவால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிறுவனம் மறு சீரமைப்பு செய்யும் நோக்கில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் 10 % ஊழியர்களை குறைக்க உள்ளதாக கடந்த மாதம் அந்த நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், போயிங்கில் பணிபுரியும் 438 ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், பணி நீக்கம் செய்யப்படும் 438 பேர்களில் 218 பேர் இன்ஜினியர்கள், விஞ்ஞானிகள். மீதமுள்ளவர்கள் தொழில்நுட்ப பிரிவினர். இவர்கள் ஜனவரி மாதம் வரை அவர்கள் கம்பெனியில் பணிபுரிவார்கள்’’ என்றனர்.

 

The post போயிங் நிறுவனத்தில் 438 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Boeing ,Seattle ,Virginia ,United States ,Washington, California ,Dinakaran ,
× RELATED விண்வெளி நிலையத்தில் சிக்கிய சுனிதா...