×

மழையால் நிரம்பிய இலக்கியம்பட்டி ஏரி

 

தர்மபுரி, நவ.17: தர்மபுரி மாவட்டத்தில், ராமாக்காள் ஏரி, அன்னசாகரம் ஏரி, ரெட்ரிஏரி, செட்டிகரை ஏரி, பைசுஅள்ளி ஏரி, சேஷம்பட்டி ஏரி, இலளிகம் ஏரி, அதியமான்கோட்டை உள்பட 75க்கும் மேற்பட்ட ஏரிகள், தொப்பையாறு, கேசரிகுலஹள்ளி, நாகாவதி, பஞ்சப்பள்ளி, வாணியாறு உள்ளிட்ட 9 அணைகள் உள்ளன. இந்நிலையில் தர்மபுரி மாவட்டதில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.

இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி, ராமாக்காள் ஏரி, ரெட்ரி ஏரி, சேஷம்பட்டி ஏரி என 50க்கும் மேற்பட்ட -ஏரிகள் கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது. இந்த நிலையில் நேற்று இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இலக்கியம்பட்டி ஏரி நிரம்பியது. அதிகப்படியான நீர் வழிந்தோட துவங்கியுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post மழையால் நிரம்பிய இலக்கியம்பட்டி ஏரி appeared first on Dinakaran.

Tags : Literambatti Lake ,Dharmapuri ,Dharmapuri district ,Ramakal Lake ,Annasagaram Lake ,Redri Lake ,Chettikarai Lake ,Baisualli Lake ,Seshampatti Lake ,Ilalikam Lake ,Athiyamankottai ,Toppaiyar ,Kesarikulahalli ,Nagavathi ,Panchapalli ,Vaniyar ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்