×

புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

சிவகங்கை, நவ.17: சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை நகர் வர்த்தக மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் வழியாக சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே செல்கின்றன.

திருச்சி, ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை வழி செல்லும் ரயில்களில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.ரயில்வே ஸ்டேசனில் இருந்து நகர்ப்பகுதி சுமார் 1.5 கி.மீ தூரம் உள்ளது. இரவு நேரங்களில் ஸ்டேசனில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai railway station ,Sivagangai Nagar Trade and All Traders Association ,Chennai ,Trichy ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்