×

குழந்தைகள் தின விழா

கீழக்கரை, நவ.17: கீழக்கரை புதுத்தெரு நூரானியா நர்சரி பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஆஃப்ரின் தலைமை வகித்தார். அல்பய்யினா அகாடமி ஹமீது ஆயிஷா தஸ்லீமா மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கவுன்சிலர் பாதுஷா வரவேற்றார். குழந்தைகளுக்கு ஏற்படும் நோய், பாதுகாப்பு முறைகள் குறித்து டாக்டர் நவ்ஃபல் விழிப்புணர்வு உரை ஆற்றினார். அல் குழந்தை வளர்ப்பு குறித்து அக்ஸா ரபீக் ஆலிம் பேசினார். தெற்குத்தெரு ஜமாத் துணைத்தலைவர் மைஃபா சீனி அப்துல் காதர், பவ்சுல் அலிய்யுர் ரஹ்மான் கல்விக்குழு உறுப்பினர் சாகிதீன் முன்னிலை வகித்தனர். கராத்தே பயிற்றுநர் உமர் முக்தார் தற்காப்புக்கலை செய்து காட்டினார். பள்ளி நிர்வாக மேலாளர் சுபைர் நன்றி கூறினார்.

The post குழந்தைகள் தின விழா appeared first on Dinakaran.

Tags : Children's Day ,Geezakarai ,Noorania Nursery Primary School ,Keezakarai Pudutheru ,Afrin ,Albayina Academy ,Hameed Aisha Taslima ,Councilor ,Badusha ,Children's Day Celebration ,Dinakaran ,
× RELATED தேசிய குழந்தைகள் தின விழா பங்கேற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு