×

தூத்துக்குடியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி, நவ.17:தூத்துக்குடியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமினை பார்வையிட்டு மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவு விட்டது. அதன்படி நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 20வது வார்டுக்குட்பட்ட கந்தசாமிபுரம் ஆர்சி பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வட்டச்செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், வட்டப்பிரதிநிதி அருணகிரி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Mayor ,Jaganperiyaswamy ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை காரணமாக சென்னையில்...