×

போலீசாரை சரமாரியாக தாக்கும் போதை கும்பல்: வீடியோ வைரல்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன், மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரை தாக்கி உள்ளனர். ரத்த காயங்களுடன் இசக்கி, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற காவல் துறையினர், அவர்களை தேடிய போது, நேரு சிலை பின்புறம் உள்ள மற்றொரு தனியார் பார் அருகே இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து வடக்கு காவல்நிலைய போலீசாரான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் அவர்களிடம் சென்று மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 2 போலீசாரையும் கம்பால் சரமாரியாக தாக்கியது. இதில் இரண்டு போலீசாரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது, ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 7 பேர் கைதான நிலையில், இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post போலீசாரை சரமாரியாக தாக்கும் போதை கும்பல்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar District ,Rajapalayam Panchu Market ,Nehru ,Isaki ,Isakki ,Dinakaran ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்