×

சட்டீஸ்கரில் 5 நக்சல்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் கான்கெர் மாவட்டங்களின் எல்லையோரத்தில் உள்ள அபுஜ்மத் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள், எல்லைப்பாதுகாப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு படையினர் இணைந்து நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

பதில் தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து நக்சல்களின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. நக்சல்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையின்போது இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.

The post சட்டீஸ்கரில் 5 நக்சல்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh Raipur ,Border Security Force ,District Reserve Police ,Forces ,Naxals ,Abujamad forest ,Narayanpur ,Kanker ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED எல்லைகளை பாதுகாக்க டிரோன் எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்: அமித் ஷா