×
Saravana Stores

முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனை போல் மோடிக்கும் ஞாபக மறதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அமராவதி: அமெரிக்க அதிபர் பைடனை போல் பிரதமர் மோடிக்கும் ஞாபக மறதி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிர தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அமராவதியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் செய்தது போல எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கலாம் என்றும், 16 பெரிய தொழிலதிபர்களின் லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யலாம் என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் எழுதப்படவில்லை. அரசியலமைப்பை நாட்டின் மரபணுவாக காங்கிரஸ் பார்க்கிறது.

ஆனால், ஆளும் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸுக்கு இது ஒரு வெற்றுப் புத்தகம். நான் மக்களவையில் பிரதமர் மோடியிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரினேன். இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டுமென கூறினேன். ஆனால் அவர் என்னை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என கூறுகிறார். முன்னாள் அமெரிக்க அதிபரைப் போலவே மோடிக்கும் ஞாபக மறதி ஏற்பட்டு உள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காக நான் நின்றதால், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜ சார்பில் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவை விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் கொல்லும் ஆயுதங்கள். நாட்டில், வேலையின்மை அதிகரித்து வருவதால்தான் சமூகத்தில் வெறுப்பு பரவுகிறது. தொழிலதிபர்கள் உங்களைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கவில்லை, அதை இந்திய மக்கள்தான் செய்கிறார்கள் என்பதை மோடிஜியிடம் நான் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

The post முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனை போல் மோடிக்கும் ஞாபக மறதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : US ,president ,Biden ,Rahul Gandhi ,AMRAVATI ,PRIME ,MINISTER ,MODI ,Maharashtra elections ,
× RELATED வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் டிரம்ப்...