×
Saravana Stores

வெளிநாடுகளில் நடக்கவுள்ள போட்டிகளில் பங்கேற்க 13 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6 லட்சத்துக்கான காசோலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்கேற்கும் செலவுகளை மேற்கொள்ள இயலாமையால், போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்ற சூழலை மாற்றிட, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலமாக வெளிநாடுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு அந்த போட்டிகளில் பங்கேற்றிட, போட்டிகளுக்கான நுழைவுக்கட்டணம், பயணம் மற்றும் தங்குமிட செலவுகளுக்கான நிதியினை வழங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 01.12.2024 முதல் 08.12.2024 வரை மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர்களுக்கான விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள உள்ள 11 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கான மொத்தத்தொகை ரூ.2,20,000க்கான காசோலையை நேற்று வழங்கினார்.

தென்கொரிய நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வாள்வீச்சு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ள வாள்வீச்சு வீராங்கனை பி.சசிபிரபாவுக்கு ரூ.2,00,000க்கான காசோலையையும் வழங்கினார். எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொள்ள பாரா பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ஜெகதீஸ்டில்லிக்கு ரூ.1,79,184க்கான காசோலை என மொத்தம் 13 விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு மொத்தம் ரூ.5,99,184க்கான காசோலைகளை டி.என் சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து வழங்கினார்.

The post வெளிநாடுகளில் நடக்கவுள்ள போட்டிகளில் பங்கேற்க 13 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6 லட்சத்துக்கான காசோலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Tamilnadu Champions Foundation ,
× RELATED புகழ யாரும் இல்லாத விரக்தியில்...