×

டி20யில் சொதப்பிய பாக்.: தொடரை கைப்பற்றிய ஆஸி.

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடந்த 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 13 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸி அணி, நேற்றைய போட்டியில் முதலில் ஆடி, 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. மேத்யு ஷார்ட் அதிகபட்சமாக, 32 ரன் எடுத்தார். பாக். அணியின் ஹாரிஸ் ராப் 4, அப்பாஸ் அப்ரிடி 3, சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய பாக். அணியின் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வௌிப்படுத்தி, வருவதும் அவுட்டாகி போவதுமாக இருந்தனர். இறுதியில், 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 134 ரன் மட்டுமே எடுத்த பாக். அணி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 2-0 புள்ளிக் கணக்கில் ஆஸி அணி, தொடரை கைப்பற்றி உள்ளது. கடைசி மற்றும் 3வது போட்டி நாளை நடக்கிறது.

The post டி20யில் சொதப்பிய பாக்.: தொடரை கைப்பற்றிய ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Aussies ,Sydney ,T20 ,Sydney, Australia ,Aussie ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு