- தர்ணா
- தேனி மின் வாரியம்
- பிறகு நான்
- மின் வாரிய ஓய்வு பெற்ற பெற்றோர் நல அமைப்பு
- தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்ற பெற்றோர் நல அமைப்பு
தேனி, நவ. 16: தேனியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தேனி கிளை சார்பில், தேனியில் உள்ள மாவட்ட மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
கிளைசெயலாளர் மாரிச்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, தேனி மாவட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சிஓடிஇஇ கிளை செயலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் பேசினர். இதில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தின்போது, ஓய்வூதியத்தினை எரிசக்தி துறை மற்றும் மின்சார வாரியமே வழங்கிட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும், காசில்லா மருத்துவத்தை நடைமுறைப்படுத்தவும், மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடித்திடவும், விதவை மற்றும் விவாகரத்தான மகளுக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், தேனி கிளை பொருளாளர் அமிர்தவள்ளில் நன்றி கூறினார்.
The post தேனி மின்வாரிய அலுவலகம் முன்பாக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.