×

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் தர்ணா

 

திண்டுக்கல், நவ. 16: குஜிலியம்பாறை தாலுகா கோட்டாநத்தம் கிராமம் ஏ.டி.காலனியை சேர்ந்த மக்கள் 15க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாக கூறி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் வீடு, குடிசைகள் ஆக்கிரமித்து கட்டப்படுவதை நாங்கள் தடுக்க முயன்றோம். அப்போது எங்களை சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தோம்’ என்றனர்.

இதையடுத்து அவர்களில் 4 பேரை கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்து விட்டு சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Dindigul Collector's Office ,Dindigul ,A.D. Colony ,Kujiliamparai taluk Kottanatham ,Dindigul Collector's ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்