ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.16: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் சேரி பகுதியில் பொது நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பாலம் அமைக்கப்பட்டது. பாலப்பணிகள் நிறைவடைந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி, நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர், நகராட்சி உதவி பொறியாளர் நாகராஜன், சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரா மற்றும் நகர்மன்ற உறுப்பினர் செந்தில்வேல் பழனி, நகராட்சி ஒப்பந்ததாரர் ஜீவா மற்றும் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பெருமாள்சேரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பாலம்: நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.