×

டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இங்கிலாந்து

செயின்ட் லுாசியா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, செயின்ட் லுாசியாவில் நேற்று நடந்த, 3வது டி20 போட்டியில் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆடி வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆடி வெற்றி வாகை சூடிய நிலையில், செயின்ட் லுாசியாவில் நேற்று 3வது டி20 போட்டி நடந்தது.

இதில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. 146 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடி, 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை, 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது. 4வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

The post டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : England ,West Indies ,T20I ,St. Lucia ,T20 ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20: 7 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி